2-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை


2-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை
x
தினத்தந்தி 5 July 2021 2:36 AM IST (Updated: 5 July 2021 2:36 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் 2-வது நாளாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று 22 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 35 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். தற்போது 257 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 203 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியுள்ளது.
மாவட்டத்தில் நேற்று கோவாக்சின் தடுப்பூசி இல்லாததால், கோவிஷீல்டு தடுப்பூசி 838 பேருக்கு போடப்பட்டுள்ளது. தற்போது 3,380 கோவிஷீல்டு தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. ஆனால் கோவாக்சின் தடுப்பூசி கையிருப்பில் இல்லை. 2-வது நாளாக நேற்றும் பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story