மின் கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி


மின் கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 5 July 2021 6:36 AM IST (Updated: 5 July 2021 6:36 AM IST)
t-max-icont-min-icon

மின் கம்பத்தில் மோட்டார்சைக்கிள் மோதி வாலிபர் பலி.

திரு.வி.க. நகர்,

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம்.காலனியை சேர்ந்தவர் மணி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவருக்கு லோகித்(வயது 17) என்ற ஒரே ஒரு மகன் இருந்தார். அவர் 12-ம் வகுப்பு முடித்துள்ளார்.

லோகித் தனது தந்தைக்கு தெரியாமல் மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நண்பரை பார்க்க சென்றார். அயனாவரம் கான்ஸ்டபிள் சாலை அருகே சென்றபோது நிலைதடுமாறி சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் படுகாயம் அடைந்த லோகித், அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதபமாக உயிரிழந்தார்.

ஒரே மகனை இழந்த மணி மற்றும் அவருடைய மனைவி இருவரும் மகனின் உடலை பார்த்து கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து வில்லிவாக்கம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story