கோட்டூர் அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட நிலத்தை சீரமைக்கும் பணி


கோட்டூர் அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட நிலத்தை சீரமைக்கும் பணி
x
தினத்தந்தி 5 July 2021 6:30 PM IST (Updated: 5 July 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

கோட்டூர் அருகே ஓ.என்.ஜி.சி. குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட நிலத்தை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே மேலப்பனையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது41).விவசாயி. இவருக்கு ெசாந்தமான விளைநிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டு இருந்த ஓ.என்.ஜி.சி. குழாயில் கடந்த சில நாட்களுக்கு முன்பு உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது. வயலில் கச்சா எண்ணெய் பரவியதால் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த ஓ.என்.ஜி.சி. முதன்மை பொது மேலாளர் மாறன், நல்லூர் பாதுகாப்பு அதிகாரி விஜயராகவன், செயற்பொறியாளர் பரமேஸ்வரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். அப்போது விவசாயி சிவகுமாரை சந்தித்து பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.1 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் இழப்பீடாக தருவதாகவும், பாதிக்கப்பட்ட நிலத்தின் பரப்பை நாங்களே சீரமைத்து தருவதாகவும் தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து ஓ.என்.ஜி.சி. குழாய் உடைப்பால் பாதிக்கப்பட்ட நிலத்தை சீரமைக்கும் பணி நேற்று முன்தினம் தொடங்கியது.

இதற்காக பொக்லின் எந்திரம் மற்றுமு் 7 டிராக்டர்களை கொண்டு சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இன்னும் ஒரிரு நாட்களில் சீரமைக்கும் பணி முடிவடையும் என ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story