தென்னம்பட்டினத்தில், முல்லையாற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் தடுப்பணை கட்டும் பணி
தென்னம்பட்டினத்தில், முல்லையாற்றின் குறுக்கே ரூ.10 கோடியில் தடுப்பணை கட்டும் பணி பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.
திருவெண்காடு,
திருவெண்காடு அருகே தென்னம்பட்டினம் கிராமத்தின் வழியாக ஓடி, கீழ மூவர்கரை கடலில் கலக்கும், முல்லையாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி ரூ.10 கோடி செலவில் பொதுப்பணித்துறை மூலம் நடந்து வருகிறது. இந்த பணியை பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டார். அப்போது அவர் கூறுகையில், தடுப்பணை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். மேலும் சீர்காழி தொகுதியில், புதிய திட்டங்களை கொண்டு வர, தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கி வலியுறுத்த உள்ளேன். இதனைத் தொடர்ந்து அதே கிராமத்தில் முல்லை ஆற்றின் கீழ் குமிழி சேதமடைந்துள்ள பகுதியை பார்வையிட்டு, விரைவில் உரிய நிதி ஒதுக்கீடு பெற்று, புதிய கீழ் குமிழி கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அப்போது சீர்காழி ஒன்றிய குழுத்தலைவர் கமலஜோதி தேவேந்திரன், பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர் நிலவழகி கோபி, ஊராட்சி மன்ற தலைவர் சரளா கோபாலகிருஷ்ணன், மாவட்ட தி.மு.க. பிரதிநிதி முத்துக்குமரன், சமூக ஆர்வலர் மங்கை வெங்கடேசன் மற்றும் விவசாய பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story