முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
நீர்ப்பிடிப்பு பகுதியில் பருவமழை பெய்து வருவதால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தேனி:
தேனி, திண்டுக்கல், மதுரை உள்பட 5 மாவட்ட மக்களின் நீர்ப்பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரமாக முல்லைப்பெரியாறு அணை திகழ்கிறது.
இந்த அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக பருவமழை பெய்துவருகிறது. இதன் எதிரொலியாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்து உள்ளது.
முல்லைப்பெரியாறு அணையில் நேற்று முன்தினம் நீர்வரத்து வினாடிக்கு 254 கனஅடியாக இருந்தது. இந்நிலையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பருவமழை மேலும் தீவிரம் அடைந்துள்ளதால் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது.
அதன்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று 127.80 அடியாகவும் நீர்வரத்து வினாடிக்கு 254 கனஅடியிலிருந்து 1006 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 1,755 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
நீர்ப்பிடிப்பு பகுதிகளில் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்) வருமாறு:- பெரியாறு- 22.6, தேக்கடி- 10.2, கூடலூர்- 43.7, சண்முகா நதி- 7.8, உத்தமபாளையம்- 4.1, வீரபாண்டி- 12, வைகை அணை-14.6. மஞ்சளாறு- 6, சோத்துப் பாறை-15. ஆண்டிப்பட்டி-53.8, அரண்மனைப்புதூர்-4.3, போடி- 6.8, பெரியகுளம்-22.
Related Tags :
Next Story