ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு புத்தகம் வினியோகம்


ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு புத்தகம் வினியோகம்
x
தினத்தந்தி 5 July 2021 9:27 PM IST (Updated: 5 July 2021 9:27 PM IST)
t-max-icont-min-icon

ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகளுக்கு புத்தகம் வினியோகம்

திருப்பூர்,
திருப்பூர் ரெயில்வே நிலையம் அருகே ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்நிலையில் கொரோனா பாதிப்பினால் ஏற்பட்ட ஊரடங்கின் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டன. இதன் பின்னர் தற்போது பள்ளிகளில் மாணவ-மாணவிகள் சேர்க்கைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மீண்டும் பள்ளிகளை திறக்க நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில் மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த கல்வியாண்டிற்கான புத்தகங்கள் வினியோகம் செய்யும் பணியும் கடந்த வாரத்தில் இருந்து நடந்து வருகிறது. 
கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் மாணவிகள் வகுப்பு வாரியாக பிரிக்கப்பட்டு குறிப்பிட்ட நாட்களில், சில வகுப்புகளை சேர்ந்தவர்களுக்கு புத்தகங்கள் வினியோகம் செய்யப்படுகிறது என பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா தெரிவித்தார்.

Next Story