துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி
துப்பாக்கி சூட்டில் பலியான விவசாயிகளுக்கு அஞ்சலி
பல்லடம்
தமிழகத்தில் கடந்த, 1972-ம் ஆண்டு இந்த கட்டண உயர்வை கண்டித்து பல்லடம் அருகே க.அய்யம்பாளையத்தில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கி சூட்டில் முத்துகுமாரசாமி, சுப்பையன் ஆகிய 2 விவசாயிகள் உயிரிழந்தனர். இவர்கள் நினைவாக க.அய்யம்பாளையத்தில் நினைவு தூண் அமைக்கப்பட்டது. ஆண்டுதோறும் ஜூலை மாதம் 5-ந்தேதி இந்த இடத்தில் விவசாய சங்கத்தினர், அரசியல் கட்சியினர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதையொட்டி நேற்று உழவர் உழைப்பாளர் கட்சி மாநிலத்தலைவர் செல்லமுத்து தலைமையில் மாநில செயலாளர் சின்னக்காளிபாளையம் ஈஸ்வரன், பொருளாளர் பாலசுப்பிரமணியம், மாநில இளைஞர் அணி செயலாளர் காடாம்பாடி கணேசன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்டசெயலாளர் கரைப்புதூர் ராஜேந்திரன் தலைமையில் மாவட்ட தலைவர் ராமசாமி, உள்பட பலர் கலந்துகொண்டனர், கட்சிசார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மாநிலத்தலைவர் சண்முகம், செயல்தலைவர் என்.எஸ்.பி.வெற்றி ஆகியோர்அஞ்சலி செலுத்தினர். இதில் சண்முகசுந்தரம், ஈஸ்வரன், வேல்மணி, ராசு, தங்கவேல் உள்பட பலர் கலந்துகொண்டனர்.தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில்நிறுவனர்- வக்கீல் ஈசன் முருகசாமி, மாநில தலைவர் சண்முகசுந்தரம், மாநில பொதுச்செயலாளர்- முத்துவிசுவநாதன் உள்படபலர் கலந்துகொண்டனர். பா.ஜ.க.விவசாய அணி சார்பில், மாநில தலைவர் ஜி.கே.நாகராஜ் தலைமையில் மாவட்ட விவசாய அணி தலைவர் ரமேஷ்குமார் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.அனைத்திந்திய விவசாய மற்றும் தொழிலாளர் சங்க நிறுவனத்தலைவர் மணி தலைமையில் பலர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
Related Tags :
Next Story