தாராபுரத்தில் பஸ் நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.
தாராபுரத்தில் பஸ் நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டது.
தாராபுரம்,
தாராபுரத்தில் பஸ் நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு 50 சதவீதம் பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டது. .
பஸ்கள் இயக்கம்
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த மே மாதம் 10-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவால் பொது போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது. இதனால் வெளியூர் மற்றும் உள்ளூர் பஸ்கள் இயக்கப்படவில்லை. இதனால் தாராபுரத்தில் உள்ள பஸ் டெப்போக்களில் உள்ள 79 பஸ்கள் இயக்கப்படாமல் கடந்த 2 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் 50 சதவீத பயணிகளுடன் அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்க அரசு அனுமதியளித்தது.
தாராபுரம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ்களில் முக கவசம் அணிந்து 50 சதவீத இருக்கைகளிலும் பயணம் செய்ய பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். பஸ் நிலையத்தில் அதிக எண்ணிக்கையில் பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தும் தேவைக்கேற்ப மட்டும் இயக்கப்பட்டன.
கூட்டம் அதிகம்
பஸ் நிலைய வளாகத்தில் உள்ள டீக்கடைகள் கடைகள் மற்றும் உணவகங்கள் பெரும் அளவில் அடைக்கப்பட்டிருந்தன. ஆனால் பஸ் நிலையத்தில் வெளியூர் செல்லும் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பஸ் நிலையத்தில் கிளை மேலாளர் வேலுச்சாமி பஸ்கள் இயக்கம் குறித்து பார்வையிட்டார்.
Related Tags :
Next Story