உடுமலையில் கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உடுமலையில் கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
உடுமலை
உடுமலையில் கோவில்கள் திறக்கப்பட்டு, பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவில்கள் திறப்பு
கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடுமலையில் உள்ள கோவில்கள் அடைக்கப்பட்டிருந்தன. கோவில்களில் அர்ச்சகர்கள் மட்டும் தினசரி பூஜை செய்து வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளின்படி நேற்று உடுமலையில் உள்ள கோவில்கள் திறக்கப்பட்டன.
உடுமலையில் சக்தி வாய்ந்த தெய்வமாக விளங்கும் மாரியம்மன் கோவிலில் நடை (கதவு) திறப்புக்காக காலையில் கோவிலின் கிழக்கு புறம் உள்ள பிரதான நுழைவு வாயில் (கதவு) முன்பு விநாயகர் வழிபாடு, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், கதவிற்கு தீர்த்தம் தெளித்தல், தீபாராதனை ஆகிய நிகழ்ச்சிகள்நடந்தன. நிகழ்ச்சிக்குகோவில் பரம்பரை அறங்காவலர் யு.எஸ்.எஸ்.ஶ்ரீதர் முன்னிலை வகித்தார்.இந்த நிகழ்ச்சிகளை கோவில் அர்ச்சகர்கள் நடத்தினர். இதைத்தொடர்ந்து கோவில்நடை திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோவிலில் மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சிகளில் பக்தர்கள்மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
பிரசன்ன விநாயகர் கோவில்
இதேபோன்று உடுமலையில் பிரசித்தி பெற்ற பிரசன்ன விநாயகர் கோவிலில் பிரதான நுழைவு வாயிலுக்கு (கதவு) பூஜை செய்யப்பட்டு நடைதிறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பிரசன்ன விநாயகர் உள்ளிட்டு கோவில் வளாகத்தில் உள்ள சன்னதிகளில் உள்ள தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதேபோன்று உடுமலையில் உள்ள மற்ற கோவில்களும் நேற்று திறக்கப்பட்டு, பக்தர்கள் வழிபட அனுமதிக்கப்பட்டனர்.
கோவில்களில் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படிபக்தர்களுக்கு கைகளில் தேய்ப்பதற்கு கிருமிநாசினி வழங்கப்பட்டது. அத்துடன் தெர்மல் ஸ்கேனர் மூலம்பக்தர்களின் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்பட்டது.
Related Tags :
Next Story