மருதமலையில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது


மருதமலையில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது
x
தினத்தந்தி 5 July 2021 4:25 PM GMT (Updated: 5 July 2021 4:25 PM GMT)

காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேர் கைது

வடவள்ளி

மருதமலையில் காட்டுப்பன்றியை வேட்டையாடிய 4 பேரை வனத்துறை யினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது. 

துப்பாக்கி சுடும் சத்தம் 

கோவை கோட்ட வனப்பகுதியில் வனவிலங்குகள் வேட்டையாடு வதை தடுக்க வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக அவுட்டுக்காய் என்று அழைக்கப்படும் நாட்டுவெடிகுண்டு வைத்து காட்டுப்பன்றிகளை வேட்டையாடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் கோவையை அடுத்த மருதமலை அடிவார பகுதியில் உள்ள மீனாட்சி நகா் அருகே  துப்பாக்கி யால் சுடும் சத்தம் கேட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த  அந்த பகுதியை சேர்ந்தவர்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து பார்த்தனர்.

காட்டுப்பன்றியை சுட்டனர் 

அப்போது அங்கு ஒரு கார் நின்றது. அதன் அருகே நின்ற 4 பேர் துப்பாக்கியால் காட்டுப்பன்றியை சுட்டது தெரியவந்தது. இதையடுத்து பொதுமக்கள் அந்த 4 பேரையும் மடக்கி பிடித்தனர். 

பின்னர் அவர்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து துப்பாக்கியுடன் இருந்த 4 பேரையும் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.

 அதில் அவர்கள், கோவை முல்லை நகரை சேர்ந்த அசோக்குமார் (வயது 43), சின்னத்தடாகம் சசிகுமார் (47), பன்னிமடை சம்பத்குமார் (39), நாமக்கல் தேவராஜ் (55) என்பது தெரியவந்தது. 

4 பேர் கைது 

தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில், நாட்டுத்துப்பாக்கி மூலம் வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த காட்டுப்பன்றியை சுட்டது தெரியவந்தது. 

இதையடுத்து 4 பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும்  அவர்களிடம் இருந்து நாட்டுதுப்பாக்கி, கார்பறிமுதல் செய்யப் பட்டது.

இறந்து கிடந்த காட்டுப்பன்றியின் உடலை வனத்துறையினர் கைப்பற்றி னார்கள். இதில் அசோக்குமார் துப்பாக்கி சுடும் பயிற்சி பெற் றவர் என்பது குறிப்பிடதக்கது.


Next Story