தனிமைப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 23 ஆக குறைந்தது
தனிமைப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 23 ஆக குறைந்தது
ஊட்டி
நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. ஊட்டி நகராட்சியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 200-க்கும் மேல் இருந்தது. இதனால் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் 120-க்கும் மேல் கண்காணிக்கப்பட்டு வந்தது.
14 நாட்கள் வெளிநபர்கள் உள்ளே செல்லவும், உள்ளே வசிப்பவர்கள் வெளியே வரவும் தடை விதிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டது. தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதால் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள் எண்ணிக்கை குறைந்து உள்ளது.
தற்போது 23 இடங்கள் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகிறது. 35 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கட்டுப்பாட்டுப் பகுதிகளில் தொடர்ந்து கிருமிநாசினி தெளித்தும், பிளீச்சிங் பவுடர் போட்டும் சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story