உடுமலையில் நேற்று 50 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
உடுமலையில் நேற்று 50 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
உடுமலை
கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகளின்படி உடுமலையில் நேற்று 50 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம் செய்தனர்.
பஸ்கள் இயக்கம்
கொரோனா ஊரடங்கு காரணமாக பஸ்கள் இயக்கப்படுவது நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. உடுமலை கிளை தமிழ் நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தில் வெளியூர் செல்லும் பஸ்கள் 36-ம், டவுன் பஸ்கள் 58-ம், ஸ்பேர் பஸ்கள் 7-ம்என மொத்தம் 101 பஸ்கள் உள்ளன. இந்த பஸ்களில் கடந்த சில நாட்களாக பராமரிப்பு பணிகள் நடந்தது.
அரசு உத்தரவு எப்போது வந்தாலும் பஸ்களை இயக்குவதற்கு பஸ்கள் தயார் நிலையில் வைக்கபட்டிருந்தன. இந்த நிலையில் ஊரடங்கில் அரசு அளித்துள்ள கூடுதல் தளர்வுகளின்படி உடுமலையில் நேற்று முதல் கட்டமாக வெளியூர் செல்லும் பஸ்கள் 20, டவுன் பஸ்கள் 30 என மொத்தம் 50 அரசு பஸ்களை இயக்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
பயணிகள் கூட்டம்
இதைத்தொடர்ந்து நேற்று இந்த பஸ்கள் 50-ம் இயக்கப்பட்டன. இதில்பொள்ளாச்சி, கோவை ஆகிய ஊர்களில் இருந்து உடுமலை வழியாக பழனிக்கு சென்ற பஸ்கள், பழனியில் இருந்து உடுமலை வழியாக பொள்ளாச்சி, கோவை ஆகிய ஊர்களுக்கு சென்ற பஸ்கள் மற்றும் உடுமலையில் இருந்து பழனி, திருப்பூர் மற்றும் பொள்ளாச்சி ஆகிய ஊர்களுக்கு சென்ற பஸ்களில் காலையில் கூட்டம் அதிகமாக இருந்தது.
அதன் பிறகு அளவான கூட்டமே இருந்தது. பயணிகள் போக்குவரத்து அதிகம் இருக்கும் வழித்தடங்களில் டவுன்பஸ்கள் காலையில் இருந்தே இயக்கப்பட்டன. இந்த பஸ்களில் அளவான கூட்டமே இருந்தது. மற்ற வழித்தடங்களில் பயணிகள் ஓரளவு சேர்ந்ததும் அந்த வழித்தடங்களிலும் டவுன் பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு உத்தரவுப்படி டவுன் பஸ்களில் பெண்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படவில்லை.
தனியார் பஸ்கள்
உடுமலையில் வெளியூர்களுக்கு செல்லும் தனியார் பஸ்கள் 5-ம், டவுன் பஸ்கள் 19-ம் என மொத்தம் 24 பஸ்கள் உள்ளன.
தனியார் பஸ்கள் ஓடவில்லை. அதேசமயம் வெளியூரைச்சேர்ந்த 2 தனியார் பஸ்கள் உடுமலைக்கு இயக்கப்பட்டன.
Related Tags :
Next Story