டெல்டாவில் கொரோனாவுக்கு 12 பேர் பலி ஒரே நாளில் 352 பேருக்கு தொற்று உறுதி


டெல்டாவில் கொரோனாவுக்கு 12 பேர் பலி ஒரே நாளில் 352 பேருக்கு தொற்று உறுதி
x
தினத்தந்தி 5 July 2021 10:09 PM IST (Updated: 5 July 2021 10:09 PM IST)
t-max-icont-min-icon

டெல்டாவில் ஒரே நாளில் 352 பேருக்கு தொற்று உறுதியானது. 12 பேர் பலியானார்கள்.

தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் நேற்று மேலும் 227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 64 ஆயிரத்து 471 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 220 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 61 ஆயிரத்து 698 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 45, 53, 68, 72 வயதுடைய 4 பெண்களும், 62, 65, 65, 70 வயதுடைய 4 ஆண்களும் என 8 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 795 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 1,978 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நாகை மாவட்டத்தில் நேற்று மேலும் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 933 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 29 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 17 ஆயிரத்து 370 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 40 வயது பெண்ணும், 55 வயது ஆணும் என 2 பேர் பலியானார்கள். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 290 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று 34 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்து 284 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 35 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 19 ஆயிரத்து 761 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயது பெண் உயிரிழந்தார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 268 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மேலும் 52 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 49 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 65 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 36 ஆயிரத்து 189 பேர் குணம் அடைந்துள்ளனர்.

கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 59 வயது மூதாட்டி பலியானார். இதன்மூலம் பலியானவர்களின் எண்ணிக்கை 339 ஆக உயர்ந்துள்ளது. தற்போது 521 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

டெல்டா மாவட்டங்களான தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 352 பேருக்கு தொற்று உறுதியானது. 12 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story