கோமுகி அணையில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு
கல்வராயன்மலை கோமுகி அணையில் கலெக்டர் ஸ்ரீதர் ஆய்வு பூங்கா அமைப்பது குறித்து அதிகாரிகளிடம் ஆலோசனை
கச்சிராயப்பாளையம்
கல்வராயன்மலை அடிவாரத்தில் கோமுகி அணை உள்ளது. இதன் மொத்த நீர் மட்டம் 46 அடி ஆகும். ஆனால் அணையின் பாதுகாப்பு கருதி 44 அடி வரை மட்டுமே தண்ணீரை சேமித்து வைத்து ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் வாரத்தில் பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் 11 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த நிலையில் கோமுகி அணையில் உள்ள மின் விளக்குகள் சரியாக எரியாமல் இரவில் இருள்சூழ்ந்து காணப்பட்டது. இதனால் அருகில் உள்ள பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியது. இதை சரி செய்ய வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் நேற்று கோமுகி அணையை ஆய்வு செய்தார். அப்போது அணையில் உள்ள புதிய பாசனம், பழைய பாசன வாய்க்கால்கள், ஷட்டர்களின் தன்மை, மின் விளக்குகள் குறித்தும் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மேலும் கோமுகி அணை அருகில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான காலி இடத்தில் சிறுவர் பூங்கா அமைப்பது குறித்தும், ஏற்கனவே உள்ள பூங்காக்களை பராமரிப்பது குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை(நீர்வளம்) உதவி பொறியாளர்கள் கணேசன், சுதர்சன் ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story