ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு


ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 5 July 2021 11:14 PM IST (Updated: 5 July 2021 11:14 PM IST)
t-max-icont-min-icon

ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

திருமயம், ஜூலை.6-
திருமயம் அருகே எட்டி உதைத்ததில் கீழே விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணிடம் தங்க சங்கிலியை பறித்து சென்ற ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
எட்டி உதைத்தனர்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள அற்புதபுரம் கிராமத்தை சேர்ந்தவர்அடைக்கலராஜ். இவரது மனைவி ஆனந்தி (வயது 33). இவர் நேற்று ஸ்கூட்டரில் திருமயத்திலிருந்து அற்புதபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, சித்தளஞ்சாம்பட்டி என்ற இடத்தில் இவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம ஆசாமிகள், ஆனந்தியின் அருகே சென்றனர். பின்னர் திடீரென்று அவரது ஸ்கூட்டரை காலால் எட்டி உதைத்து தள்ளி விட்டனர்.
சங்கிலி பறிப்பு
இதில், கீழே விழுந்ததில் பலத்த காயம் அடைந்த ஆனந்தி ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இதனையடுத்து அந்த ஆசாமிகள், மனிதநேயம் இன்றி அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்து சென்றுவிட்டனர்.
இதற்கிடையில் அந்த வழியாக சென்றவர்கள் சாலையில் பலத்த காயத்துடன் கிடந்த ஆனந்தியை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் திருமயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை  பறித்து சென்ற ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story