திருப்பத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க ஆர்ப்பாட்டம்


திருப்பத்தூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 July 2021 11:29 PM IST (Updated: 5 July 2021 11:29 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க ஆர்ப்பாட்டம்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு, மின்சார நிறுத்தம், அத்தியாவசியப் பொருட்கள் விலை உயர்வு, டாஸ்மார்க் கடைகள் திறப்பு ஆகியவற்றை கண்டித்து திருப்பத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் பயாஸ்பாஷா தலைமை தாங்கினார். நகர செயலாளர் என்.சேட்டு என்ற சத்தியநாதன் வரவேற்றார். மாவட்ட துணை செயலாளர் எஸ்.சரவணன், செந்தில்குமார், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தை மாநில விவசாய அணி துணைச் செயலாளர் ஆர்.என்.ராமலிங்கம், மாவட்ட செயலாளர் எம்.கே.அரிகிருஷ்ணன் தொடங்கி வைத்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, விலையை உடனடியாக திரும்பப்பெற வேண்டும், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், கட்டுமான பொருட்கள், அத்தியாவசிய பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

எம்.கே.செந்தில்குமார், அலிஜான் உட்பட பலர் பேசினார்கள். ஆர்ப்பாட்டத்தில் ஏலகிரிரவி, மதன்ராஜ், நாகராஜ், கேசவன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Next Story