கோழி கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது


கோழி கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 July 2021 11:54 PM IST (Updated: 5 July 2021 11:54 PM IST)
t-max-icont-min-icon

கோழி கடைக்காரரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

பரமக்குடி, 
பரமக்குடி அருகே உள்ள பாம்பூர் கிராமத்தில் கோழிக் கடை வைத்துள்ள அகிலன் என்பவரை புழுதிக்குளம் கிராமத்தைச் சேர்ந்த 3 வாலிபர்கள் வாளால் வெட்ட முயன்றனர். அவர்களை தடுக்க சென்ற அகிலனின் தாயார் முருகேசுவரி என்பவருக்கு வாள் வெட்டு விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை வாளால் வெட்டிய 3 பேரையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பாம்பூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து பரமக்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு வேல்முருகன் தலைமையில் போலீசார் அங்கு குவிக்கப்பட்டு புழுதிக்குளம் கிராமத்தை சேர்ந்த 3 பேரை தீவிரமாக தேடி வந்தனர். இதையடுத்து விக்னேஷ் (வயது23) கண்ணன் (2) ஆகிய 2 பேரை தாலுகா போலீசார் கைது செய்தனர்.

Next Story