சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை பணிக்கு கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் கோரிக்கை


சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை பணிக்கு கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 5 July 2021 11:57 PM IST (Updated: 5 July 2021 11:57 PM IST)
t-max-icont-min-icon

சென்னை- பெங்களூரு விரைவுச்சாலை பணிக்கு கையகப்படுத்தும் நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்

வேலூர்

வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் (சென்னை-பெங்களூரு விரைவுச்சாலை) அலுவலகத்தில் தமிழக விவசாயிகள் சங்க மாநில இளைஞரணி தலைவர் சுபாஷ் தலைமையில் விவசாயிகள் நேற்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் சென்னை- பெங்களூரு விரைவு சாலை பணிகளுக்கு கையகப்படுத்தும் நிலத்துக்கு சில இடங்களில் மிகக் குறைந்த அளவில் இழப்பீடு வழங்கப்படுகிறது. ஒரு சில இடங்களில் இன்னும் முழுமையான அளவில் வழங்கப்படவில்லை. மரம், ஆழ்துளை கிணறு மற்றும் கட்டிடத்துக்கு உண்டான இழப்பீடும் வழங்கப்படவில்லை. சந்தை மதிப்பீட்டுக்குரிய தொகையை கணக்கிட்டு 3 மடங்கு வழங்க வேண்டும், எனத் தெரிவித்துள்ளனர். 

Next Story