விவசாயி கொலையில் 3 பேர் கைது
வீரவநல்லூரில் விவசாயி கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சேரன்மாதேவி:
வீரவநல்லூர் விவசாயி கொலையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விவசாயி கொலை
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் பந்தல்மேடு பகுதியை சேர்ந்தவர் காந்திநாதன் மகன் சரவணன் (வயது 32). அதே பகுதியை சேர்ந்தவர் அய்யப்பன் (33). இருவரும் விவசாயிகள். உறவினர்கள். இருவருடைய வீடுகளும் அருகருகே உள்ளன. இவர்கள் இடையே நிலத்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் பந்தல்மேடு தாமிரபரணி ஆற்றங்கரையோரம் சரவணன் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அய்யப்பன் மற்றும் சிலர் சரவணனை அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதில் அவருக்கு கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டு விழுந்தது. இதில் சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
3 பேர் கைது
இதுகுறித்து வீரவநல்லூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சரவணன் உடலை கைப்பற்றி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக அய்யப்பன் உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் கொலை தொடர்பாக பத்ரகாந்த் (19), வேலுச்சாமி என்ற துரை (39) உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story