கலெக்டரிடம் மனு


கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 5 July 2021 6:55 PM GMT (Updated: 5 July 2021 6:55 PM GMT)

நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்-கலெக்டரிடம் மனு

விருதுநகர்
தமிழன்டா இனி என்ற அமைப்பினர் கலெக்டரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது, நாட்டுப்புற கலைஞர்கள் ஊரடங்கால் பாதிக்கப்பட்டு உள்ளதால் அவர்களுக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், வாரியத்தின் உறுப்பினர் சேர்க்கைக்காக அந்தந்த பகுதியில் முகாம் நடத்த வேண்டும், 58 வயது முதல் 65 வயதாகும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும், நாட்டுப்புற கலைஞர்கள் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்த 30 நாட்களுக்குள் வழங்க வேண்டும், அரசு மற்றும் தனியார் பஸ்களில் இலவசமாக பயணிக்க அனுமதி வழங்க வேண்டும், நாட்டுப்புற கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் பழுது நீக்க ரூபாய் ஒரு லட்சம் வரை வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், இலவசமாக இசைக்கருவி வழங்க வேண்டும், கொரோனா விதிமுறைகளை பின்பற்றி கோவில் திருவிழாக்கள் நடைபெற அனுமதி வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த அமைப்பின் தலைவர் ஜெகதீசன் தலைமையில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story