பனியன் நிறுவன தொழிலாளிக்கு ஆயுள்


பனியன் நிறுவன தொழிலாளிக்கு ஆயுள்
x
தினத்தந்தி 6 July 2021 12:25 AM IST (Updated: 6 July 2021 12:25 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் வியாபாரியை குத்திக்கொலை செய்த பனியன் நிறுவன தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பூர்
திருப்பூரில் வியாபாரியை குத்திக்கொலை செய்த பனியன் நிறுவன தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.
பூண்டு கடைக்காரர்
திருப்பூர்மங்கலம் ரோடு செங்குந்த புரத்தை சேர்ந்தவர் லோகநாதன் வயது 26. இவர் தென்னம் பாளையத்தில் பூண்டு கடை வைத்து நடத்தி வந்தார். கடந்த 25.10.2018 அன்று இரவு லோகநாதன் தனது நண்பரான அரண்மனை புதூரை சேர்ந்த சந்தோஷ் குமார் என்பவருடன் தாராபுரம் ரோடு சங்கிலி பள்ளம் பாலம் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது திருப்பூர் அரண்மனை புதூரை சேர்ந்த ரஞ்சித் 29 என்பவர் அங்கு வந்து இருவரும் நின்று பேசியதை கண்டித்து தகராறு செய்துள்ளார். அதன் பிறகு இரவு 11 மணி அளவில் லோகநாதன், சந்தோஷ்குமார் இருவரும் அரண்மனைபுதூரில் ரோட்டோரம் நின்று பேசிக் கொண்டிருந்தனர்.
வாலிபர் குத்திக்கொலை
இந்த நிலையில் அங்கு வந்த ரஞ்சித், மீண்டும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபம் அடைந்த ரஞ்சித் கத்தியால் லோகநாதனை குத்தினார். இதில் படுகாயமடைந்த அவரை திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி லோகநாதன் இறந்தார்.
இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து பனியன் நிறுவன தொழிலாளியான ரஞ்சித்தை கைது செய்தனர்.
ஆயுள் தண்டனை
இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. லோகநாதனை குத்திக் கொலை செய்த ரஞ்சித்துக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி சொர்ணம் நடராஜன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வக்கீல் கே. என். சுப்பிரமணியம் ஆஜராகி வாதாடினார்.

Next Story