குளத்தில் வழுக்கி விழுந்த டீக்கடை தொழிலாளி சாவு

கறம்பக்குடி, ஜூலை.6-
கறம்பக்குடி அருகே உள்ள மழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அகதீஸ்வரன் (வயது 40). இவர் கறம்பக்குடி சீனி கடைமுக்கம் பகுதியில் உள்ள டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று காலையில் அகதீஸ்வரன் அங்குள்ள கருப்பர்கோவில் குளத்தில் குளிக்க சென்றார். குளத்தின் படிக்கட்டில் இறங்கியபோது படியில் படர்ந்திருந்த பாசி வழுக்கியதால் தவறி கீழே விழுந்தார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதை கண்ட குளத்தில் குளித்து கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு கறம்பக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அகதீஸ்வரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்தெரிவித்தார். இதுகுறித்து கறம்பக்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story