தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்


தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 July 2021 12:42 AM IST (Updated: 6 July 2021 12:42 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூர்
கரூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மகளிர் அணி செயலாளர் மாலதி வினோத் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் கஸ்தூரி என்.தங்கராஜ் வரவேற்று பேசினார். இதில் தொழிற்சங்க பேரவை துணைத்தலைவர் பொன்.இளங்கோவன், பெருநகர பொருளாளர் பழனிவேல் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட வேண்டும்,  டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும், கட்டுமான பொருட்கள், அத்தியாவசிய பொருட்கள், மின்சாரம் மற்றும் விலைவாசி உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Next Story