லோடு ஆட்டோவில் மணல் கடத்திய 2 பேர் கைது


லோடு ஆட்டோவில் மணல் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 6 July 2021 12:52 AM IST (Updated: 6 July 2021 12:52 AM IST)
t-max-icont-min-icon

லோடு ஆட்டோவில் மணல் கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நெல்லை:

பாளையங்கோட்டை அருகே உள்ள மணக்காட்டை சேர்ந்தவர்கள் சுரேஷ் என்ற சுச்சி (வயது 26), கோபி என்ற கோட்டியப்பன் (19). இவர்கள் 2 பேரும் ஒரு லோடு ஆட்டோவில் மணக்காடு ஆற்றுப்பகுதியில் மணல் கடத்தி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. 

இதுகுறித்து தகவலறிந்த பாளையங்கோட்டை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சுரேஷ், கோபி ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் லோடு ஆட்டோவை மணலுடன் பறிமுதல் செய்தனர்.

Next Story