விஷவண்டு கடித்து விவசாயி பலி
விஷவண்டு கடித்து விவசாயி பலியானார்.
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே பொட்டலூரைச் சேர்ந்தவர் தங்க நாடார் (வயது 68). விவசாயியான இவர் இறைச்சிக்கடையும் நடத்தி வந்தார். இவருடைய மகன் மாரிமுத்து (29). சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் தங்களது வீட்டின் வளாகத்தில் உள்ள மாட்டு தொழுவத்தை சுத்தம் செய்தனர். அப்போது அங்குள்ள மரப்பலகையாலான கோழிக்கூண்டை நகர்த்தினர். அப்போது அங்கிருந்த விஷ வண்டுகள் திடீரென்று தங்க நாடாரையும், மாரிமுத்துவையும் கடித்தன.
இதில் படுகாயமடைந்த அவர்கள் 2 பேரையும் குடும்பத்தினர் மீட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனாலும் சிகிச்சை பலனின்றி தங்க நாடார் பரிதாபமாக இறந்தார். மாரிமுத்து சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஆலங்குளம் தீயணைப்பு வீரர்கள், தங்க நாடாரின் வீட்டில் இருந்த விஷ வண்டுகளை தீயிட்டு அழித்தனர்.
Related Tags :
Next Story