காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம்
காதல் திருமண ஜோடி போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தனர்.
சமயபுரம்
சிறுகனூர் அருகே உள்ள நெடுங்கூர் தெற்கு தெருவைச் சேர்ந்த அறிவழகனின் மகன் பாஸ்கர்(வயது 21). லாரி டிரைவர். இவரும், சி.ஆர்.பாளையம் மேலத்தெருவைச் சேர்ந்த செல்வராஜின் மகள் சரண்யாவும்(20) காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவர்களது காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், நேற்று இனாம் சமயபுரம் ஆதிமாரியம்மன் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, பெற்றோர்கள் தங்களை பிரித்து விடுவார்களோ என்று அஞ்சிய காதல் திருமண ஜோடி சமயபுரம் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்தது. இதைத்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் மற்றும் போலீசார், 2 பேரின் பெற்றோர்களை போலீஸ் நிலையத்திற்கு வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சரண்யாவின் பெற்றோர் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், பாஸ்கரின் பெற்றோருடன் காதல் திருமண ஜோடியை போலீசார் அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story