குமரி மாவட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம்


குமரி மாவட்ட வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 6 July 2021 1:51 AM IST (Updated: 6 July 2021 1:51 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஓட்டல் மற்றும் டீ கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டனர்.

நாகர்கோவில், 
குமரி மாவட்டத்தில் வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டதை தொடர்ந்து கோவில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஓட்டல் மற்றும் டீ கடைகளில் வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட்டனர்.
கோவில்கள் திறப்பு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலை பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்து வருவதால் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. அதன்படி நேற்று முதல் வழிபாட்டு தலங்கள் செயல்பட அரசு அனுமதி அளித்தது. அதன்படி தமிழகம் முழுவதும் நேற்று கோவில்கள், கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டன.
அதே போல குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மதத்தினரின் வழிபாட்டு தலங்களும் திறக்கப்பட்டன. சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில், கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில், முப்பந்தல் இசக்கி அம்மன் கோவில், தோவாளை முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். 
நாகராஜா கோவில்
நாகர்கோவிலை பொறுத்த வரையில் நாகராஜா கோவில், ஒழுகினசேரி சோழராஜா கோவில், வடிவீஸ்வரம் இடர்தீர்த்த பெருமாள் கோவில், அழகம்மன் கோவில், வடசேரி காசி விஸ்வநாதர் ஆலயம், கிருஷ்ணன் கோவில் உள்ளிட்ட முக்கிய கோவில்கள் மற்றும் சிறிய கோவில்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். 

Next Story