கர்நாடகத்தில் புதிதாக 2,848 பேருக்கு கொரோனா


கர்நாடகத்தில் புதிதாக 2,848 பேருக்கு கொரோனா
x
தினத்தந்தி 6 July 2021 2:08 AM IST (Updated: 6 July 2021 2:08 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் புதிதாக 2,848 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் புதிதாக 2,848 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருப்பதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

30 மாவட்டங்களிலும்....

கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 575 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது. இதில் புதிதாக 2,848 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அதிகபட்சமாக பெங்களூரு நகரில் 520 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக மைசூருவில் 371 பேரும், ஹாசனில் 383 பேரும், தட்சிண கன்னடாவில் 265 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 26 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு 200-க்கும் கீழ் பதிவாகி உள்ளது. மொத்தத்தில் 30 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்தமாக இதுவரை 28 லட்சத்து 56 ஆயிரத்து 491 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

67 பேர் சாவு

வைரஸ் தொற்றுக்கு தட்சிண கன்னடாவில் 12 பேர், பல்லாரியில் 9 பேர், பெங்களூரு நகரில் 7 பேர், மைசூருவில் 6 பேர் என மொத்தம் 67 பேர் இறந்தனர். இதன்மூலம் சாவு எண்ணிக்கை 35 ஆயிரத்து 434 ஆக அதிகரித்து உள்ளது. 5 ஆயிரத்து 361 பேர் நேற்று டிஸ்சார்ஜ் ஆனார்கள். இதுவரை 27 லட்சத்து 79 ஆயிரத்து 38 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். 41 ஆயிரத்து 996 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Next Story