அரசு பஸ் ஓட்டிய அமைச்சர்
அரசு பஸ்சை அமைச்சர் ஓட்டினார்.
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள ஆனந்தவாடி கிராமத்தில் பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காக கூடுதல் பஸ் போக்குவரத்தை அமைச்சர் சிவசங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அந்த பஸ்சை சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் ஓட்டிச்சென்றார். அப்போது அதனை செல்போனில் படம் பிடித்த சிலர் அமைச்சரை செல்போனை பார்க்க சொன்னார்கள். அதற்கு செல்போனை பார்த்தால் எப்படி வண்டியை ஓட்டுவது என்று அவர் கூறியதால் சிரிப்பலை ஏற்பட்டது. பின்னர் அமைச்சர் பஸ்சை எந்த ஊருக்கு ஓட்டுவது என்று கேட்டுக்கொண்டு, பஸ்சை ஓட்டினார். அமைச்சர் பஸ் ஓட்டியதை கண்டு கிராம மக்கள் உற்சாகமடைந்தனர்.
Related Tags :
Next Story