பூலாம்பட்டியில் படகு போக்குவரத்து தொடக்கம்


பூலாம்பட்டியில் படகு போக்குவரத்து தொடக்கம்
x
தினத்தந்தி 6 July 2021 3:48 AM IST (Updated: 6 July 2021 3:48 AM IST)
t-max-icont-min-icon

பூலாம்பட்டியில் படகு போக்குவரத்து தொடங்கி உள்ளது.

எடப்பாடி:
எடப்பாடி அடுத்த பூலாம்பட்டியில் கொரோனா பரவலால் படகு போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் மலைவாழ் மக்கள் ஆற்றைக் கடக்க 8 கிலோ மீட்டர் தூரம் சுற்றி சென்றனர். தற்போது ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் சேலம்- ஈரோடு மாவட்டங்களுக்கு இடையே படகு போக்குவரத்து நேற்று தொடங்கியது. இதனால் அந்த பகுதி மக்கள், வியாபாரிகள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Next Story