தம்மம்பட்டி அருகே விவசாயி அடித்துக்கொலை- 3 பேர் கைது
தம்மம்பட்டி அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தம்மம்பட்டி:
தம்மம்பட்டி அருகே விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
விவசாயி
தம்மம்பட்டியை அடுத்துள்ள வள்ளுவர் நகர் பகுதியைச் சேர்ந்த விவசாயி சுப்பிரமணி (வயது 52). இவருடைய நிலத்துக்கு அருகில் நல்லேந்திரன், சடையாண்டி (எ) பெரியசாமி ஆகியோருக்கு சொந்தமான நிலம் உள்ளது. அந்த நிலத்தில் நெல் அறுவடை எந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அங்கு வந்த நல்லேந்திரன், பெரியசாமி மற்றும் பாண்டியன் ஆகியோர் நெல் அறுவடை எந்திரத்தை வெளியே எடுக்குமாறு கூறியுள்ளனர். இதனை அறிந்த சுப்பிரமணி அங்கு வந்து அதை தட்டிக் கேட்டுள்ளார்.
3 பேர் கைது
அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்களுக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதில் கீழே விழுந்த சுப்பிரமணி பலத்த காயம் அடைந்து பரிதாபமாக இறந்தார். தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் சுப்பிரமணி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி, சுப்பிரமணியை அடித்துக் கொலை செய்ததாக நல்லேந்திரன், பெரியசாமி, பாண்டியன் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story