இசையமைப்பாளருக்கு கொலை மிரட்டல் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார்


இசையமைப்பாளருக்கு கொலை மிரட்டல் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார்
x
தினத்தந்தி 6 July 2021 7:30 AM IST (Updated: 6 July 2021 7:30 AM IST)
t-max-icont-min-icon

இசையமைப்பாளருக்கு கொலை மிரட்டல் தயாரிப்பாளர் மீது போலீசில் புகார்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம், இளங்கோ நகரை சேர்ந்தவர் ஜெயபாலா. சினிமா இசையமைப்பாளரான இவர், கடந்த ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கில் டில்லி வேலுமணி என்பவர் தயாரித்து வரும் “மாயமுகி” என்ற புதிய படத்துக்கு இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

இசை அமைக்கும் பணி முழுமையாக முடிவடைந்ததால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அதனை தயாரிப்பாளர் டில்லி வேலுமணியிடம் போட்டு காட்டினார். ஆனால் படத்துக்கு இசையமைக்க பேசியபடி பணத்தை முழுமையாக கொடுக்காமல் படத்தின் தயாரிப்பாளர் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயபாலா வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த தயாரிப்பாளர் டில்லி வேலுமணி உள்பட சிலர், படத்தின் இசை தொடர்பான ஹார்டு டிஸ்க்கை தருமாறு கேட்டு தகராறு செய்ததுடன், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக இசையமைப்பாளர் ஜெயபாலா அளித்த புகாரின்பேரில் விருகம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story