சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்
சிறுமிக்கு நடக்க இருந்த திருமணத்தை தடுத்து நிறுத்திய போலீசார்.
திரு.வி.க. நகர்,
சென்னை பெரம்பூரை அடுத்த தீட்டிதோட்டம் தெருவில் உள்ள ஒரு வீட்டில் அயூப் (வயது 23) என்ற வாலிபருக்கும், அவரது உறவுக்கார பெண்ணான 14 வயது சிறுமிக்கும் நேற்று காலை திருமணம் நடக்க இருப்பதாக பெரவள்ளூர் அனைத்து மகளிர் போலீசுக்கு தகவல் வந்தது. உடனடியாக சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்றனர். போலீசாரை பார்த்த மணமகன் மற்றும் அவரது உறவினர்கள் அங்கிருந்து தப்பினர்.
இதனால் சிறுமிக்கு நடக்க இருந்த திருமணம் தடுத்து நிறுத்தப்பட்டது. சிறுமி மீட்கப்பட்டு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மணமகன் மற்றும் திருமண ஏற்பாட்டாளர்களை தேடி வருகின்றனர்.

Related Tags :
Next Story