குமரியில் 4 வழிச்சாலை பணியில் புகார் இருந்தால் தெரிவிக்கலாம் - விஜய்வசந்த் எம்.பி. வேண்டுகோள்


குமரியில் 4 வழிச்சாலை பணியில் புகார் இருந்தால் தெரிவிக்கலாம் - விஜய்வசந்த் எம்.பி. வேண்டுகோள்
x
தினத்தந்தி 6 July 2021 4:14 PM IST (Updated: 6 July 2021 4:14 PM IST)
t-max-icont-min-icon

குமரியில் 4 வழிச்சாலை பணியில் புகார் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம் என விஜய்வசந்த் எம்.பி. கூறினார்.

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் ஒழுகினசேரி அப்டா மார்க்கெட் முதல் காவல்கிணறு வரை நடைபெற்று வரும் பணிகளை விஜய்வசந்த் எம்.பி. நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார். மேலும் பணிகளின் விவரம் பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்ததோடு, விரைந்து முடிக்கும்படியும் கூறினார். ஆய்வின்போது 4 வழிச்சாலை பணிகள் திட்ட இயக்குனர் வேல்ராஜ் உடனிருந்தார்.

பின்னர் விஜய்வசந்த் எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்த போது கூறியதாவது:-

குமரி மாவட்டத்தில் 3 இடங்களில் 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 2 இடங்களில் 75 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. சில இடங்களில் பாலங்கள் கட்ட வேண்டி உள்ளது. இதனால் பணிகள் சற்று தாமதம் ஆகின்றது. 2 ஆண்டுகளுக்குள் முடியும் என்று அதிகாரிகள் கூறினர். அதை இன்னும் துரிதப்படுத்தும்படி கேட்டுள்ளேன். மேலும் சில இடங்களில் சாலை பணிகள் தொடர்பாக பொதுமக்கள் சில கோரிக்கைகளை வைத்துள்ளனர். அது தொடர்பாக அதிகாரிகளிடம் பேசினேன். அப்போது பொதுமக்களின் கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். மேலும் 4 வழிச்சாலை பணிகளில் ஏதேனும் புகார் இருந்தால் பொதுமக்கள் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story