வாழை சாகுபடியில் அதிக மகசூல் பெறும் வழிமுறைகள் - வேளாண் அதிகாரி விளக்கம்
வாழை சாகுபடியில் அதிக மகுசூல் பெறும் வழிமுறைகள் குறித்து வேளாண் அதிகாரி விளக்கம் அளித்துள்ளார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம், தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ் குமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அழகியமண்டபம்,
ராஜாக்கமங்கலம் வட்டாரத்தில் வாழை சாகுபடி சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வாழை பயிர் பொதுவாக அதிக நீர் மற்றும் ஊட்டச்சத்துக்கள் தேவையுள்ள பயிராகும். ஆனால், நடைமுைறயில் முக்கிய சத்துக்களான தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல் சத்துக்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நுண்ணூட்ட சத்துக்களுக்கு கொடுப்பதில்லை.
இதனால் தேைவயான அளவு உரம் இட்ட தோட்டங்களில் கூட மரங்களின் வளர்ச்சி குன்றி மகசூல் குறைவதுடன், தரக் குறைபாடு ஏற்படுவதுண்டு. எனவே இந்த குைறபாடுகளை களைய முக்கிய சத்துக்களுடன் நுண்ணூட்டச் சத்துக்களை கலந்து உரிய விகிதத்தில் கொடுப்பதன் மூலம் வாழை தார்களின் தரத்தை மேம்படுத்தலாம்.
தேசிய வாழை ஆராய்ச்சி மையம், திருச்சியின் கண்டுபிடிப்பான “பனானா சக்தி” என பெயரிடப்பட்டுள்ள நுண்ணூட்டச் சத்துக் கலவையை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் வீதம் கலந்து வடிகட்டி அதனுடன் ஒட்டும் திரவம் கலந்து வாழை கன்று நட்ட 3,4,5,6 மற்றும் 7-ம் மாதங்களில் இலைகளில் நன்கு நனையும் படி தெளிப்பதன் மூலம் வாழை கன்றின் வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும் இந்த நுண்ணூட்ட கலவையை அளிப்பதனால் அதிக எண்ணிக்கையில் சீப்புகளும், காய்களும் எவ்வித வெடிப்பும் இன்றி நல்ல தரத்துடன் பெறமுடியும்.
கூடுதலாக, ஐந்தாம் மாதத்தில் மரத்திற்கு 20 கிராம் என்ற அளவில் பென்டொனைட் சல்பர் உரத்தை மற்ற உரங்களுடன் சேர்த்து கொடுப்பதாலும் வாழை தார்களின் தரத்தை உயர்த்தலாம்.
தரமான தார்களை பெற உறை இடுவதும் கூடுதல் பயன் அளிக்கும். விவசாயிகளுக்கு வாழை தார்களுக்கு உறைகள் வாங்கிட 50 சதவீதம் மானியத்தில் ஒரு எக்டருக்கு ரூ. 12,500 வழங்கப்படுகிறது.
மேலும், கூடுதல் தகவலுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தை 04652-275800 என்ற தொலைப்பேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story