பழையகாயல் அருகே தொழிலாளிக்கு அரிவாள்வெட்டு


பழையகாயல் அருகே தொழிலாளிக்கு அரிவாள்வெட்டு
x
தினத்தந்தி 6 July 2021 5:48 PM IST (Updated: 6 July 2021 5:48 PM IST)
t-max-icont-min-icon

பழையகாயல் அருகே தொழிலாளி அரிவாளால் வெட்டப்பட்டார்.

ஆறுமுகநேரி:
பழையகாயல் அடுத்துள்ள இடையர்காடு தளவாய்புரம் வடக்கு தெருவை சேர்ந்த சக்கையா மகன் அரிராமன் (வயது 49). தொழிலாளியான இவர், நேற்றுமுன்தினம் மாலையில் குமாரபன்னையூரில் உறவினர் ஒருவர் இறந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார். அப்போது எதிர்பாராமல் அந்த கூட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த கணேஷ் குமாரின் காலில் அவர் மிதித்து விட்டாராம்.
இதில் கணேஷ்குமாருக்கும் அரிராமனுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. இந்தநிலையில் அன்று மாலை 6 மணி அளவில் குமார பன்னையூர் சேர்ந்தமங்கலம் செல்லும் மூன்று வழி சாலையில் அரிராமன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ராஜா ஆகியோர் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அங்கு வந்த  கணேஷ்குமார் அரிவாளால் அரிராமனை சரமாரியாக வெட்டிவிட்டுதப்பி ஓடிவிட்டார். இதில் காயமடைந்த அரிராமன் ஆத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். இதுதொடர்பாக ஆத்தூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து கணேஷ் குமாரை தேடி வருகின்றார்.

Next Story