தூத்துக்குடியில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


தூத்துக்குடியில் வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 6 July 2021 6:30 PM IST (Updated: 6 July 2021 6:30 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் கொலை முயற்சி வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி கான்வெண்ட் ரோட்டை சேர்ந்தவர் ரோசாரி. இவருடைய மகன் மரிய அந்தோணி பிச்சை டைட்டஸ் என்ற டைட்டஸ் (வயது 24). இவரை ஒரு கொலை முயற்சி வழக்கில் தூத்துக்குடி வடபாகம் போலீசார் கைது செய்தனர். இவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் டைட்டசை கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.
இதன் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை 86 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

Next Story