தூத்துக்குடி கடலோர பகுதிகளில் ஆட்கள் கடத்தல் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தீவிர நடவடிக்கை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தகவல்
தூத்துக்குடி கடலோர பகுதிகளில் ஆட்கள் கடத்தல் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி கடலோர பகுதிகளில் ஆட்கள் கடத்தல் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.
இது குறித்து அவர் நேற்று தாளமுத்துநகர் போலீஸ் நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கலந்தாய்வு கூட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கடல் வழியாக கடத்தல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கடற்கரை பகுதியில் உள்ளூர் போலீசார் மட்டுமின்றி, கடலோர பாதுகாப்பு போலீசார், கடலோர காவல்படை உள்ளிட்ட பாதுகாப்பு பிரிவினர் உள்ளனர். அவர்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடத்துகிறோம். அப்போது எங்களிடம் உள்ள தகவல்களை அவர்களுக்கும், அவர்களிடம் உள்ள தகவல்களை எங்களுக்கும் பகிர்ந்து கொள்கிறோம்.
ஆட்கள் கடத்தல்
தூத்துக்குடியில் அடிக்கடி மஞ்சள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இது ஒரு கூட்டு முயற்சி.
முழு ஊரடங்கு காலத்தில் இலங்கையை சேர்ந்த 27 பேர் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு சென்று உள்ளனர். அவர்கள் 3 அல்லது 4 பேராக சரக்கு வாகனத்தில் ஏறி சென்று உள்ளனர். ஊரடங்கு காலத்தில் கார்களை முழுமையாக சோதனை செய்தோம்.
அதே நேரத்தில் சரக்கு வாகனங்கள் அனைத்தும் அனுமதிக்கப்பட்டன. இதனால் அதனை பயன்படுத்தி சென்று உள்ளனர். அதனையும் முழுமையாக விசாரித்து வருகிறோம். இனிமேல் இதுபோன்ற ஆட்கள் கடத்தல் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
குண்டர் சட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 155 கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டு, 181 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். அவர்களிடம் இருந்து 60 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 8 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். இதுவரை 86 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் கஞ்சா, போதை பொருள் யார் வைத்து இருந்தாலும், அவர்கள் கண்டிப்பாக குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story