காதலியை ஏமாற்றிய வாலிபர் கைது


காதலியை ஏமாற்றிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 6 July 2021 7:43 PM IST (Updated: 6 July 2021 7:43 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே திருமணம் செய்து கொள்வதாக கூறி காதலியை ஏமாற்றிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தேனி: 

பெரியகுளம் அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்த பழனிசாமி மகன் சதீஷ் (வயது 24). இவர், 20 வயது பெண் ஒருவரை காதலித்து வந்தார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி அந்த பெண்ணை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று அவருடன் நெருங்கி பழகியுள்ளார். 

பின்னர் ஊர் பெரியவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். ஆனால், அவர் தனது பெற்றோரின் தூண்டுதலின் பேரில் திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்து அவரை ஏமாற்றியுள்ளார். 

இதுகுறித்து தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் செய்தார். அதன்பேரில் சதீஷ், அவருடைய தந்தை பழனிசாமி உள்பட 4 பேர் மீது போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரதிகலா வழக்குப்பதிவு செய்தார். 


இதில் சதீசை போலீசார் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story