பழனி வையாபுரி குளக்கரையை அளவிடும் பணி


பழனி வையாபுரி குளக்கரையை அளவிடும் பணி
x
தினத்தந்தி 6 July 2021 8:11 PM IST (Updated: 6 July 2021 8:11 PM IST)
t-max-icont-min-icon

கோர்ட்டு உத்தரவு எதிரொலியாக, பழனி வையாபுரி குளக்கரையை அளவிடும் பணி தொடங்கியது.

பழனி:
பழனியில் 300 ஏக்கர் பரப்பளவில் வையாபுரி குளம் உள்ளது. இங்கு தேக்கப்படும் தண்ணீரை பயன்படுத்தி ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

 மேலும் குளத்தில் தேங்கும் தண்ணீரால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்தநிலையில் குளத்தின் கரைப்பகுதி பலம் இழந்து வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

இதைக்கருத்தில் கொண்டு வையாபுரி குளக்கரையை பலப்படுத்த ரூ.4 கோடி நிதி ஒதுக்கப்பட்டு கட்டுமான பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. 

இதற்கிடையே கட்டுமான பணிகளை தொடங்குவதற்கு முன்பு குளக்கரையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை கணக்கெடுத்து அகற்ற வேண்டும் என்றும், குளத்தின் எல்லையை அளவீடு செய்ய வேண்டும் என்றும் விவசாயிகள் தரப்பில் மதுரை ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது.


இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, வையாபுரி குளக்கரையை அளவீடு செய்ய உத்தரவு பிறப்பித்தது. அதன்பேரில், வையாபுரி குளக்கரையை அளவீடு செய்து எல்லைக்கற்கள் ஊன்றும் பணியில் வருவாய்த்துறையினர் மற்றும் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர். 

இந்த பணி இன்னும் 2 நாட்கள் நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Next Story