காங்கேயம் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

காங்கேயம் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
x
தினத்தந்தி 6 July 2021 9:14 PM IST (Updated: 6 July 2021 9:14 PM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.

காங்கேயம்
காங்கேயம் அருகே அரசு பஸ் மீது கல்வீசிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அரசு பஸ் மீது கல்வீச்சு
கோவை உப்பிலிபாளையம் பணிமனையை சேர்ந்த பஸ் ஒன்று நேற்று முன்தினம் கோவை காந்திபுரத்தில் இருந்து காங்கேயம் வழியாக கரூருக்கு புறப்பட்டு சென்றது. 
பஸ்சை கோவையை சேர்ந்த ஆனந்த் பாபு (வயது 34) ஓட்டினார். இந்தநிலையில் காங்கேயம் அருகே சம்மந்தம்பாளையம் பகுதி அருகே மாலையில் வந்தது. அப்போது, சாலையோரம் குடிபோதையில் இருந்த 3 பேர் பஸ்சின் மீது கல்வீசி தாக்கி உள்ளனர். இதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது. 
3 வாலிபர்கள் கைது
இதுகுறித்து பஸ் டிரைவர் ஆனந்த்பாபு அளித்த புகாரின் பேரில் ஊதியூர் போலீசார், பஸ் மீது கல்வீசிய மதுரையைச் சேர்ந்த பூபதி (27), விருதுநகரைச் சேர்ந்த அப்துல்காதர் (22), சிவகங்கையை சேர்ந்த பவுன்ராஜ் (19) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். 
விசாரணையில் கல் வீசிய 3 பேரும் காங்கேயம் அருகே உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்து வந்ததும், நேற்று டாஸ்மாக் கடை திறந்தால் மது வாங்கி குடித்து விட்டு பஸ்சை நிறுத்த முயற்சித்த போது பஸ் நிற்காமல் சென்றதால் குடிபோதையில் கற்களை வீசியதும் தெரியவந்தது. 

Next Story