திருப்பூரில் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி
திருப்பூரில் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி
திருப்பூர்
திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் தினசரி காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று மாநகராட்சி சார்பில் நடைபெற்றது. உதவி ஆணையாளர் வாசுகுமார், சுகாதார அதிகாரி பிச்சை மற்றும் மருத்துவ குழுவினர் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மேற்கொண்டனர்.
காய்கறி மார்க்கெட் வியாபாரிகள் 150 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. மார்க்கெட்டுக்கு மக்கள் அதிகம் பேர் வந்து செல்வதால் வியாபாரிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கொரோனா தடுப்பூசி போடும் பணியை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story