பழனி அருகே கோவில் பூட்டை உடைத்து நகை திருட்டு
பழனி அருகே கோவிலின் பூட்டை உடைத்து நகை திருட்டு போனது.
பழனி :
பழனி-பழைய தாராபுரம் சாலையில் மானூர் அடுத்த கோணவாய்க்கால் என்ற பகுதியில் இசக்கியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் இசக்கியப்பன் என்பவர் பூஜை செய்து வருகிறார். நேற்று முன்தினம் அவர் வழக்கம்போல் கோவிலை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை கோவிலை திறக்க வந்த போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் அதுகுறித்து பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அம்மன் கழுத்தில் கிடந்த அரை பவுன் தங்கத்தாலியை மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story