அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 50 பேர் மீது வழக்கு


அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 50 பேர் மீது வழக்கு
x
தினத்தந்தி 6 July 2021 10:36 PM IST (Updated: 6 July 2021 10:36 PM IST)
t-max-icont-min-icon

காரைக்குடியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 50 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

காரைக்குடி,
காரைக்குடி ராஜீவ்காந்தி சிலை எதிரே சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தை சேர்ந்த அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்கம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம், தனியார் பஸ் தொழிலாளர் சங்கம் ஆகியவை சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்கத்தின் மண்டலச் செயலாளர் தெய்வீர பாண்டியன் தலைமை தாங்கினார். ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் நகர செயலாளர் வெங்கட் முன்னிலை வகித்தார்..அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 25 பேர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.இதே போல ஏ.ஐ.டி.யு.சி. தொழிற்சங்கம் சார்பில் காரைக்குடி சுப்பிரமணியபுரத்தில் தனியார் முதலாளிகளின் பல்லாயிரம் கோடிரூபாய் வங்கி கடன்களை தள்ளுபடி செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஏ.ஐ.டி.யு.சி.மாநில துணை செயலாளர் பி.எல்.ராமச்சந்திரன் தலைமை தாங்கினார். காரைக்குடி நகர ஒருங்கிணைப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார், அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 25 பேர் மீது காரைக்குடி வடக்கு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.



Next Story