சிவகங்கை நகருக்குள் சுற்று பஸ் இயக்க வேண்டும்-போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை


சிவகங்கை நகருக்குள் சுற்று பஸ் இயக்க வேண்டும்-போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை
x
தினத்தந்தி 6 July 2021 5:15 PM GMT (Updated: 6 July 2021 5:15 PM GMT)

சிவகங்கை நகருக்குள் சுற்று பஸ் இயக்க வேண்டும் என்று போக்குவரத்து துறை அமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது.

சிவகங்கை,

சிவகங்கை முன்னாள் அரசு வக்கீல் வைரமணி தலைமையில் செயற்குழு உறுப்பினர் பூபதி, மூத்த வக்கீல் மதிவாணன், இளைஞர் அணியைச் சேர்ந்த காஞ்சிரங்கால் மதிவாணன் ஆகியோர் போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
மாவட்ட தலைநகரான சிவகங்கையில் பஸ் நிலையம், ெரயில் நிலையம், அரசு மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம், நீதிமன்றங்கள் போன்ற இடங்களுக்கு செல்வதற்கு பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். இதற்காக கூடுதல் பணம் செலவழித்து வாடகை வாகனங்களில் செல்லவேண்டியுள்ளது. எனவே சிவகங்கை நகரில் சுற்று பஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பஸ் சிவகங்கை பஸ் நிலையத்திலிருந்து ெரயில் நிலையம், 48 காலனி, போலீஸ் குடியிருப்பு, அண்ணாமலை நகர், அம்பேத்கர் சிலை, மருத்துவ கல்லூரி, மதுரை முக்கு, நீதிமன்றம், கலெக்டர் அலுவலகம் ஆகிய இடங்களுக்கு சென்று மீண்டும் பஸ் நிலையத்திற்கு வரும் வகையில் இரண்டு சுற்று பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.


Next Story