ரூ.3 லட்சம் குட்கா, பான்மசாலா பறிமுதல்; வியாபாரி கைது
காரைக்குடியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.
காரைக்குடி,
காரைக்குடி காந்தி தெருவில் உள்ள பல்பொருள் ஏஜென்சி நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கில் அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா, பான்பராக், புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக காரைக்குடி உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துக்குமாருக்கு தகவல் கிடைத்தது..அதன் பேரில் முத்துக்குமார், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி, சாக்கோட்டை உணவு பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன், காரைக்குடி வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுந்தர மகாலிங்கம் ஆகியோர் சம்பந்தப்பட்ட சேமிப்புக் கிடங்கிற்கு நேற்று அதிகாலை சென்று அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.
பறிமுதல் செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் மதிப்பு ரூ.3 லட்சம் ஆகும்.மேலும் 1000 கிலோ தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளும் இருந்தன.அதனை நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் ரவிசங்கர், பாஸ்கரன் ஆகியோர் பறிமுதல் செய்தனர்.
அதனை தொடர்ந்து சேமிப்புக்கிடங்கின் உரிமையாளர் ரவிச்சந்திரன் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் தடை செய்யப்பட்ட பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது, யாருக்கு விற்கப்படுகிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
காரைக்குடியில் ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா, பான்மசாலா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.
அதிரடி சோதனை
அப்போது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை, பான்பராக், குட்கா, பான்மசாலா ஆகிய பொருட்கள் மூடை, மூடையாக பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வியாபாரி கைது
அதனை தொடர்ந்து சேமிப்புக்கிடங்கின் உரிமையாளர் ரவிச்சந்திரன் (வயது 50) என்பவரை போலீசார் கைது செய்தனர்.மேலும் தடை செய்யப்பட்ட பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது, யாருக்கு விற்கப்படுகிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி உள்ளனர்.
Related Tags :
Next Story