திட்டக்குடி அருகே, குடியிருப்பை சூழ்ந்த கழிவுநீர்: பொதுமக்கள் தர்ணா போராட்டம்


திட்டக்குடி அருகே, குடியிருப்பை சூழ்ந்த கழிவுநீர்: பொதுமக்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 6 July 2021 5:28 PM GMT (Updated: 6 July 2021 5:28 PM GMT)

திட்டக்குடி அருகே குடியிருப்பை சூழ்ந்த கழிவுநீரை வெளியேற்றக்கோரி பொதுமக்கள் அந்த பகுதியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திட்டக்குடி, 

திட்டக்குடி அருகே உள்ளது கோடங்குடி ஊராட்சி. ஊராட்சிக்கு உட்பட்ட 4- வது  வார்டு பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் அடைப்புகள் ஏற்பட்டு தேங்கி நின்று வருகிறது. 

அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் முன்பு குட்டை போன்று தேங்கி நிற்கும் கழிவுநீரால் தூர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் கொசுதொல்லையும்  அதிகரித்துள்ளது. 

எனவே வாய்க்காலை சுத்தம் செய்து, கழிவுநீரை வெளியேற்றக்கோரி ஊராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இருப்பினும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. 

தர்ணா போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், அவர்கள் குடியிருந்து வரும் பகுதியில் உள்ள சாலையில் அமர்ந்து நேற்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.,

இதுபற்றி அறிந்த திட்டக்குடி போலீசார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வேலாயுதம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

 அதில் 2 நாட்களில் நடவடிக்கை எடுப்பதாக ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி வேலாயுதம் உறுதியளித்தார். இதையடுத்து அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். 

Next Story