வால்பாறையில் தொழிலாளி வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது
வால்பாறையில் தொடர் மழையின் காரணமாக தொழிலாளி வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது.
வால்பாறை
வால்பாறையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்று இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல தேங்கி கிடந்தன.
மழையில் நனையாமல் இருக்க இருசக்கர வாகன ஓட்டிகள் சாலையோர கடைகள், பஸ் நிறுத்தங்களில் ஒதுங்கி நின்றதை காணமுடிந்தது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தவர்கள் மழையில் நனையாமல் இருக்க குடைபிடித்தப்படி சென்றனர்.
வால்பாறை பகுதியில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக ஆறுகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் சோலையார் அணைக்கு அதிகளவில் தண்ணீர் வருவதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.
தொடர் மழையின் காரணமாக குரங்குமுடி எஸ்டேட் பாரதிதாசன் நகரை சேர்ந்த தொழிலாளி முத்துப்பாண்டி என்பவரின் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து சேதமடைந்தது. வெளி பக்கமாக சுவர் விழுந்ததால் வீட்டில் உள்ளவர்கள் உயிர்தப்பினார்கள்.
Related Tags :
Next Story