வாணியம்பாடி அருகே முட்புதரில் மறைத்து வைத்திருந்த 200 முட்டை மணல் பறிமுதல்

வாணியம்பாடி அருகே  முட்புதரில் மறைத்து வைத்திருந்த 200 முட்டை மணல் பறிமுதல்
x
தினத்தந்தி 6 July 2021 11:49 PM IST (Updated: 6 July 2021 11:49 PM IST)
t-max-icont-min-icon

வாணியம்பாடி அருகே முட்புதரில் மறைத்து வைத்திருந்த 200 முட்டை மணல் பறிமுதல்

வாணியம்பாடி

 வாணியம்பாடி பாலாற்று பகுதியிலும், தேவஸ்தானம், பெரிய பேட்டை, பழைய வாணியம்பாடி, ஒடப்பேரி உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து மணல் கடத்தப்படுவதாக வருவாய்த் துறைக்கு புகார்கள் வந்தது அதன் பேரில், வாணியம்பாடி தாசில்தார் மோகன்,
மண்டல துணை தாசில்தார் சிவகுமார் ஆகியோர் தலைமையில் வருவாய் ஆய்வாளர் அன்பழகன், கிராம நிர்வாக அலுவலர் பிரகாசம் ஆகியோர் ஒடப்பேரி ஆற்றுப் பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அங்குள்ள முட்புதர்களில் மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததை அதிகாரிகள் கண்டிபிடித்தனர். மொத்தம் 200 மணல் மூட்டைகள் இருந்தது. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் ராமையன் தோப்பு பகுதியிலும் சோதனை நடத்தினர்.

Next Story