மேலும் 2 பேர் கொரோனாவுக்கு பலி
அரியலூர் மாவட்டத்தில் மேலும் 2 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டத்தில் நேற்று 37 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவுக்கு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 78, 84 வயதுடைய ஆண்கள் 2 பேர் உயிரிழந்தனர். இதனால் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. ஏற்கனவே சிகிச்சையில் இருந்தவர்களில் 53 பேர் குணமாகி மருத்துவமனைகளில் இருந்து நேற்று டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர்.
தற்போது 447 பேர் கொரோனாவுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் 911 பேருக்கு கொரோனா மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரவேண்டியவுள்ளது. மாவட்டத்தில் நேற்று 2,609 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story